மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் இவர் தான்..! 

 
1

விஷால் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கும் படம் மார்க் ஆண்டனி.…அதில் முக்கிய கதாபாத்திரம் சில்க் தான்…

80களில் எல்லா படங்களிலும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை நிறைந்திருந்த கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா பற்றி இப்போதும் ரசிகர்கள் ஆர்வமாக பல விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் மீண்டும் சில்க் ஸ்மிதாவை சிஜி உதவியுடன் காட்டி ரசிகர்களை கிறங்கடிக்க காத்திருக்கின்றனர்.

நடிகை சில்க் மாதிரியே வாழ்ந்து வரும் விஷ்ணுப்பிரியா காந்தி தான் இந்த படத்தில் சில்க் போல நடித்துள்ளார்…அந்த டிரெய்லரில் வரும் கண்கள் எல்லாம் அப்படியே என்னோட சீன் தான் என்றும் இயக்குநர் சொல்ல சொல்ல 2 நாள் கஷ்டப்பட்டு அதை பிராக்டீஸ் செய்து நடித்தேன்…அது நன்றாக பேசப்பட்டது..ஆனால் அவரை போல சிரிப்பது எனக்கு கஷ்டம் தான்.

1

சில்க் மாதிரி நடித்த நடிகை விஷ்ணுப்பிரியா காந்திக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் நீங்க சில்க் மாதிரி தான் இருக்கீங்க ஆனால் ரொம்பவே குண்டாக இருக்கீங்க என பலரும் பாடி ஷேமிங் செய்து வருகின்றனராம்.

அது தனக்கு வருத்தம் தந்தது என்றார் அவர்…ஆனால் அதையெல்லாம் இனிமேல் பெரிதாக கருதவில்லை என்றாலும் இந்த படத்தின் வாய்ப்பு கிடைத்த பின்னர் என்னோட வெயிட்டை குறைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்…கூடிய விரைவில் மிகவும் ஸ்லிம்மாக இருப்பேன் என சொல்லியுள்ளார் அவர்.

 

 

From Around the web