சார் சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு நாளைக்கு ரேட் கேட்ட பண்ணையார்கள் - அதிர்ச்சியடைந்த சேகர்..!
 

 
1

விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது. தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.

தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது.

எனவே அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது. ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டது சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர்.

அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.
 

சில்க் ஸ்மிதாவுடன் நடிக்க வேண்டும் என்று தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி நடிகர்கள் தவம் இருந்தார்கள். அதுமட்டுமின்றி அவர் பாதி சாப்பிட்டுவிட்டு வைத்த ஆப்பிளை கைப்பற்ற பெரிய போர்க்களமே நடந்ததாகவும்; மறைந்த பிரதமர் இந்திராகாந்திகூட யார் அந்த சில்க் ஸ்மிதா என்று கேட்டதாகவும் தகவல்கள் உண்டு. இந்தச் சூழலில் ஒரு ஷூட்டிங்கின்போது சில்க்கிற்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

அதாவது இயக்குநர் வீ.சேகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சில்க் ஸ்மிதா கமிட்டாகியிருக்கிறார். பட யூனிட் ஒரு கிராமத்துக்கு சென்றதாம். சில்க்கை ஒரு வீட்டில் தங்க வைத்தார்களாம். அடுத்த நாள் அந்த ஊரில் இருக்கும் பண்ணையார்கள் எல்லாம் சேகரை பார்க்க வந்தார்களாம். வந்தவர்கள், எவ்வளவு ஆகும் என்று கேட்டார்களாம். சேகரோ, சரி படம் தயாரிக்கத்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து மேற்படி விஷயங்களை பேச ஆரம்பித்தாராம். ஆனால் அவர்களோ அதெல்லாம் இல்லை சார் சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு நாளைக்கு என்ன விலை என்று கேட்டார்களாம். அதிர்ச்சியடைந்த சேகர், சில்க் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று சொல்லி அனுப்பிவைத்தாராம். இதனை வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

From Around the web