காசேதான் கடவுளடா படத்தில் இணைந்த ஷிவாங்கி..!

 
மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்துடன் ஷிவாங்கி

தமிழில் தயாராகும் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் மிர்ச்சி சிவா, யோகி பாபு, ப்ரியா ஆனந்த், ஊர்வசி ஆகியோருடன் சின்னத்திரை பிரபலம் ஷிவாங்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கடந்த 1972-ம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான படம் ‘காசேதன கடவுளடா’. இந்த படத்தில் முத்துராமன், லட்சுமி, ’தேங்காய்’ சீனிவாசன், மனோரமா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் அமோகமான வரவேற்பு பெற்ற இப்படம் 49 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை ஆர். கண்ணன் இயக்குகிறார். மிரிச்சி சிவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ஹீரோயினாக நடிக்க ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் முறையே முத்துராமன் மற்றும் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், மனோரமா நடித்த வேடத்தில் ஊர்வசியும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சின்னத்திரை பிரபலம் ஷிவாங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.

இதனால் ‘காசேதன கடவுளடா’ படம் ரீமேக் ஷிவாங்கி நடிக்கும் இரண்டாவது படமாக தயாராகிறது. இந்த ரீமேக் படத்துக்கும் அதே தான் டைட்டிலா என்பது தெரியவில்லை. விரைவில் இதுதொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web