கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடிக்கிறார் ஷிவானி..!
 

 
ஷிவானி
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் அடுத்த வரவாக நடிகை ஷிவானி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாரும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்தவர் ஷிவானி. அதன்மூலம் கிடைத்த புகழ், அவரை பிக்பாஸ் சீசன் 4-ல் பங்குபெற வைத்தது. இதன்மூலம் அவருக்கான ரசிகர் வட்டம் விரிவடைந்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் அவர் படத்தில் விஜய் சேதுபதிக்கு நடிப்பதாக கூறப்பட்டது.

இதுகுறித்து படக்குழு எதுவும் அறிவிப்பு வெளியிடாத நிலையில், விக்ரம் படத்தில் நடிப்பதை ஷிவானி உறுதி செய்துள்ளார். சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் சமீபத்தில் அவர் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் விக்ரம் படத்தில் நடிக்கிறீர்களா என்கிற கேள்வியை எழுப்பினார். அதற்கு விக்ரம் பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷிவானி பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அவர் விக்ரம் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

From Around the web