’கேப்டன் மில்லர்’ குறித்து சிவராஜ்குமார் கொடுத்த அப்டேட்..!

 
1

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமார். இவர் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறவர். மறைந்த இளம் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடன் பிறந்த அண்ணன் தான் சிவராஜ் குமார். சமீபத்தில் “ஜெயிலர்” படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கேங்ஸ்டராக நடித்திருந்தார். திரையில் அவர் தோன்றிய ஐந்து நிமிடங்களுக்கு தமிழ் ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பு திரையரங்குகளையே அதிரசெய்தது. உண்மையிலேயே ஒரு கேங்ஸ்டர் நடந்து வந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு அவருடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் அமைந்திருந்தது. அடுத்ததாக இவர் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் குறித்து சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் அவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

“கேப்டன் மில்லர்” படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமாக வடிவமைத்திருக்கிறார். எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக சிந்தித்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாததாக மாறிவிடும். ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு சிந்தனைகள் இருக்கும். அதுபோலத்தான் கேப்டன் மில்லர் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாமே எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இது பீரியட் படம் என்பதால் அதற்கேற்ற கலை வெளிப்பாடுகள் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒளிப்பதிவாளர் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களும் மிகவும் மெனக்கெட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.ஒரு தரமான விருந்தாக இப்படம் இருக்கும் என்றும் சிவராஜ்குமார் கூறியுள்ளார். பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்றது அதைத் தொடர்ந்து விரைவில் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ட்ரைலர் எந்த மாதிரியான எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 


 

From Around the web