நாக சைத்தன்யா உடனான காதல் குறித்து மனம் திறந்த ஷோபிதா..!!
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷோபிதா தூலிபாலா. அவர் ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தற்போது பல்வேறு மொழிகளில் தயாராகும் வெப் சிரீஸ்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
நடிகை ஷோபிதா தூலிபாலா, நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைத்தன்யாவை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் சேர்ந்து ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள், லண்டனின் ரெஸ்ட்ராண்ட் ஒன்றில் இருவரும் இணைந்து சாப்பிடும் புகைப்படங்கள் போன்றவை சர்ச்சைக்கு வலு சேர்த்துள்ளன.
இதற்கு அண்மையில் அவர் பேட்டியின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். என்னை குறித்த காதல் வதந்திகளை நான் எப்போதும் கண்டு கொள்வது கிடையாது. அதனால் எந்தவிதமான பயனும் கிடையாது. அதுபோன்ற செய்திக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அதனால் நான் அவசரமாக பதில் அளிக்கவும் விரும்பவில்லை. நான் எந்த தவறும் செய்யாதபோது எதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். எனக்கு இருக்கும் வேலையில் நான் பிஸியாக உள்ளேன். பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று ஷோபிதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)