சென்சார் கொடுத்த அதிர்ச்சி..! ‘கருடன்’ படம் குழந்தைகள் பார்க்க முடியாதா ?

 
1

'கருடன்’ படம் மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பார்வையாளர்களை மிரட்டியது என்பதும் சூரியின் வித்தியாசமான நடிப்பை பார்த்து அனைவரும் அசந்து விட்டனர்..

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளதை அடுத்து சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ’யூ/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

’யூஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட படம் என்றால் 12 வயது குறைவான வயதுள்ள குழந்தைகள் தனியாக பார்க்க அனுமதி இல்லை என்பதும் பெற்றோருடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தை பார்க்க குழந்தைகள் பெற்றோருடன் மட்டுமே திரையரங்குகளுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரகனி, மைம் கோபி , வடிவுக்கரசி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

From Around the web