த.வெ.க.வினர் அதிர்ச்சி..! விஜய் மீது அழுகிய முட்டைகளை வீச பிளான் போட்ட ரஜினி ரசிகர்கள்?

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் விஜய். தங்கள் தளபதியை வரவேற்க அனைத்து மாவட்ட தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ரஜினி ரசிகர் ஒருவர் கூறியிருப்பதாவது,மளிகை கடையில் ஒரு முட்டையின் விலை ரூ. 6 அல்லது ரூ. 6.50 என நினைக்கிறேன். மொத்தமாக கூட்டு முயற்சியா எல்லோரும் சேர்ந்து ஒரு அக்கவுண்ட் ஒன்னு ரெடி பண்ணி அதில் பணத்தை போட்டு மொத்த விலைக்கே எடுத்துடலாம். நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ரொம்ப ஃபேமஸ். அழுகிப் போன முட்டை என்றால் ரூ. 1.50 தான் வரும். அழுகிய முட்டைகளை மொத்தமாக வாங்கி விஜய் வரும்போது அவர் மீது வீசலாம் என்றார்.
அந்த ஆடியோ குறித்து அறிந்த விஜய் ரசிகர்களோ, இது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என அவர் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினி ஒரு முன்னாள் சூப்பர் ஸ்டார், எங்கள் விஜய்ணா தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்த சூப்பர் ஸ்டார் டைட்டில் தொடர்பாக ரஜினி, விஜய் ரசிகர்கள் இடையே எக்ஸ் தளத்தில் அவ்வப்போது சண்டை நடந்து கொண்டிருக்கிறது.
ரஜினியின் நடிப்பு, டான்ஸை கிண்டல் செய்து விஜய் ரசிகர்கள் ட்வீட் செய்கிறார்கள். பதிலுக்கு விஜய்யை கலாய்த்து ரஜினி ரசிகர்கள் ட்வீட் செய்கின்றனர். ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸாவதற்கு முன்பே அது பிளாஃப் என எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் டிரெண்ட் செய்தார்கள் விஜய் ரசிகர்கள். அதை பார்த்து ரஜினி ரசிகர்கள் கோபம் அடைந்து திட்டினார்கள்.
எங்கள் தலைவர் ஸ்டைலை காப்பியடித்து நடிக்கும் விஜய்க்கு தனித்துவம் இல்லை. ஆனால் எங்கள் தலைவரையே குறை சொல்வாராம் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். இப்படி ட்விட்டர் சண்டை வழக்கமாகிவிட்ட நிலையில் விஜய் மீது அழுகிய முட்டைகளை வீச ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
விஜய் மீது முட்டைகளை வீச சதித்திட்டம்?#TamilNadu #TVK #TVKVijay #TamilagaVettriKazhagam #TwitterSpace #ViralAudio #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/Ea9etH7wo9
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) February 9, 2025