அழகாக மாற நினைத்து அலங்கோலமான ரைஸா- புகைப்படம் வெளியிட்டு அதிர்ச்சி..!

 
அழகாக மாற நினைத்து அலங்கோலமான ரைஸா- புகைப்படம் வெளியிட்டு அதிர்ச்சி..!

தவறான ஃபேஷியல் காரணமாக முகம் வீங்கிவிட்டது என பிரபல சரும நிபுணர் மீது நடிகை ரைஸா வில்சன் புகார் எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி , பியார் பிரேமா காதல் படம் மூலம் கதாநாயகியாக உயர்ந்தவர் ரைஸா வில்சன். பிக்பாஸ் முதல் சீசனின் பங்கெடுத்து பிரபலமும் ஆனார். இதனால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒருசில படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன. தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக திரைத்துறையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மாலத்தீவுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற திட்டமிட்டுள்ளார் ரைஸா.

அதற்கு முன்னதாக ஃபேஷியல் செய்ய திட்டமிட்ட அவர், பிரபலமான சரும நிபுணரை சந்தித்து யோசனை பெற்றுள்ளார். அப்போது அவர் வலியுறுத்திய ஒரு ஃபேஷியலை செய்துள்ளார். இதனால் ரைஸாவின் முகம் வீக்கம் கொடுத்துவிட்டு, அலங்கோலமாக ஆகிவிட்டது.

From Around the web