உடல் மெலிந்துப் போன நடிகர் பிரபு- வெளியான அதிர்ச்சிப் புகைப்படம்..!

 
நடிகர் பிரபு

நடிகர் பிரபு உடல் மெலிந்து காணப்படும் புகைப்படத்தை சக நடிகர் ரகுமான் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளது கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பிரபு அனிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரகுமான் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ரகுமான் பிரபுவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் பிரபு மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். முதன்முறையாக பிரபு உடல் எடையை குறைத்து கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்காக இப்படி செய்தாரா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் உடல் எடை கூடி இருப்பது தான் பிரபுவுக்கு அழகும் ,கம்பீரமும் என்று கூறி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

From Around the web