சூட்டிங் காட்சிகள் இணையத்தில் லீக்.. படக்குழு அதிர்ச்சி..!  

 
1

கமல் -ஷங்கர் காம்பினேஷனில் இந்தியன் 2 உருவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில், இடையில் சில காரணங்களால் முடங்கியது. இதனிடையே இந்தப் படம் மீண்டும் தூசி தட்டப்பட்டு கடந்த ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படம் அடுத்த ஆண்டில் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை தயாரிப்பு தரப்பு விரைவு படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் லீக்காகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகமாக பரவிவரும் நிலையில், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ ஐதராபாத்தில் நடந்த சூட்டிங்கின்போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

From Around the web