என் பொண்ணு நிம்மதியாவே இருக்கக்கூடாதா..? பாக்கியவை வெளுத்து வாங்கிய ஜெனி அப்பா..!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் செழியன் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்லும் பாக்யாவிடம் திமிராக பேசுகிறான் கவுன்சிலர். அமைச்சர், முதலமைச்சருன்னு யார் சொன்னாலும் கேஸை வாங்க மாட்டேன். உங்களால எங்க போக முடியுமோ அங்க போங்க. உங்க பையன் ஜெயிலுக்கு போயிருவேன். மாசத்துக்கு ஒரு தடவை ஜெயில்ல போய் உங்க பையனை பாருங்க. இந்த விஷயத்தை சும்மா விட மாட்டேன் என்கிறாள்.
இதனால் ஷாக்காகும் பாக்யா, உங்கமேலயும் தான தப்பு இருக்கு என கேட்கிறாள். அவன் டென்ஷனாகி உங்க மூஞ்சியை பார்த்தாலே எனக்கு கோபம் அதிகமாகுது. கிளம்புங்க மொத என சொல்லி அனுப்பி வைத்து விடுகிறான். பாக்யா வெளியில் வந்து வாசலில் நிற்கும் போது, அப்போது கவுன்சிலர் கட்சியை சேர்ந்த ஒருவர் வந்து சண்டை போட்டுவிட்டு செல்கிறான். உன்னோட அரசியல் வாழ்க்கையை இன்னையோட முடிவுக்கு கொண்டு வர்றேன் என ஆவேசமாக சொல்லிவிட்டு போகிறான்.
இதனையடுத்து ஜெனியை பார்ப்பதற்காக அவளுடைய வீட்டுக்கு வருகிறாள் பாக்யா. அப்போது ஜோசப் அந்தாளு அரசியல்ல பெரிய செல்வாக்கோட இருக்கான். உங்களுக்கு அவனுக்கு ஏற்கனவே பிரச்சனை நடந்து இருக்கு. அப்பவே நீங்க உஷாரா இருந்திருக்க வேண்டாமா? இல்லன்னா செழியன் கிட்டயாவது வந்தது விஷயத்தை சொல்லி இருக்கனும். எதுவுமே பண்ணாம பிரச்சனையை பெரிசாக்கிட்டு வந்து இருக்கீங்க. என் பொண்ணு நிம்மதியாவே இருக்கக்கூடாது, அவளை நினைச்சு நானும் மரியமும் கஷ்டப்பட்டுடே இருக்கனும் ஆசைப்படுறீங்களா?
என் பொண்ணு எப்போ நிம்மதியா இருப்பான்னு எனக்கு தெரியலை என கடுப்பாக பேசுகிறான். அப்போது ஜெனியிடம் பேசுகிறாள் பாக்யா. அவள், நீங்க இப்போலாம் யாரை பத்தியும் கவலைப்படுறதே இல்லை. முன்னாடி நீங்க பண்ண எல்லா விஷயத்துலயும் உங்க பின்னாடி இருந்திருக்கேன். ஆனால் இப்போலாம் நீங்க பண்ற எதுவுமே எனக்கு பிடிக்கலை என்கிறாள். பாக்யா அவளிடம், என் பையனே என்னை புரிஞ்சுக்காத சமயத்துல நீ என்கூட சப்போர்ட்டா இருந்திருக்க.
இப்போ தெரிஞ்சோ, தெரியாமலோ என்னால உனக்கு பிரச்சனை வந்துருக்கு. இன்னைக்கு நைட்டுக்குள்ள கண்டிப்பா செழியனை வீட்டுக்கு அழைச்சுட்டு வருவேன் என சொல்லிவிட்டு போகிறாள் பாக்யா. அதனை தொடர்ந்து கவுன்சிலருடன் சண்டை போட்ட ஆளை வழியில் பார்க்கும் பாக்யா, பின்னாடி அந்த ஆளை பாலோ பண்ணி போகிறாள். அவர் அமைச்சர் ஆபீஸுக்கு வந்து அவருக்காக காத்திருக்கிறார். அப்போது அந்த கவுன்சிலர் அங்கு வருகிறான்.
பாக்யாவை அந்த ஆள் பார்த்து, எதுக்காக இங்க வந்தீங்க என கேட்கிறான். இதனையடுத்து பாக்யா, கவுன்சிலருக்கு கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. அதன்பின்னர் கவுன்சிலருக்கு எதிரான ஆள் வந்து என்ன பிரச்சனை என பாக்யாவிடம் கேட்கிறான். அவள் நடந்த எல்லா விஷயங்களை சொன்ன பிறகு, அமைச்சரை பார்க்க உதவி பண்ணுவதாக கூறுகிறார். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.