ஓராண்டுக்கு முன்பே பெண் குழந்தைக்கு தாயான ஸ்ரேயா..!

 
ஸ்ரேயா

2020 காலக்கட்டத்தில் உலகமே ஊரடங்கு காலத்தில் தவித்துக் கொண்டிருந்த போது, எங்களுடைய வாழ்க்கையை அழகாக மாற்ற தேவதை வந்தாள் என தனக்கு குழந்தை பிறந்த செய்தியை நடிகை ஸ்ரேயா அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னீஸ் வீரர் ஆண்ட்ரி கோசீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் தொடர்ந்து அவர் படங்களிலும் நடித்து வந்தார்.

தன்னுடைய தினசரி நிகழ்வுகளை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஸ்ரேயா, சமீபத்தில் பதிவிட்டுள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. அதாவது தனக்கு குழந்தை பிறந்த ஓராண்டு ஆகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஸ்ரேயா கர்ப்பமாக இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட பேபி பம்ப் போட்ட்வையும் அந்த வீடியோவில் ஸ்ரேயா பகிர்ந்துள்ளார்.

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, எதற்காக குழந்தை பிறந்த செய்தியை மறைத்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும், அவருக்கும் அவருடைய குழந்தைக்கும் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

From Around the web