மீண்டும் ரொமான்ஸ் கதைக்களத்தில் சித்தார்த்..!! வெளியான ‘டக்கர்’ படத்தின் டீசர்..!!
Apr 18, 2023, 07:05 IST

தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருபவர் சித்தார்த். அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. 'கப்பல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார்.
இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இப்படம் வரும் மே 26-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.