லண்டனில் அறுவை சிகிச்சை முடித்து இந்திய திரும்பினார் சித்தார்த்..!

 
நடிகர் சித்தார்த்

உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் லண்டனிலுள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் சித்தார்த் இந்தியா திரும்பியுள்ளார்.

தெலுங்கில் சர்வானந்த் உடன் நடிகர் சித்தார்த் ‘மஹா சமுத்திரம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்துக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது, ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட விபத்தில் சித்தார்த்தின் முதுகில் காயம் ஏற்பட்டது.

இது அவருக்கு எதிர்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவர்கள் கூறினார். அதை தடுக்க லண்டன் சென்ற அவர், அங்குள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டார். சில வாரங்களுக்கு முன்பு முதுகெலும்பில் சிறிய அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது.

இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சிகிச்சை நல்லபடியாக முடிந்து இந்தியா திரும்பிவிட்டதாக கூறியுள்ளார். விரைவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளேன். அதற்காக விரைவில் ரசிகர்களை சந்திப்பேன் என பதிவில் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.
 

From Around the web