மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா..! வைரலாகும் ‘மார்க் ஆண்டனி’ பட ட்ரைலர்..!

 
1

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் SJ சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, YG மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரெயலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘என்னாபா ரெடியா? ரெக்கார்ட் பண்ணிக்க’ என்று நடிகர் கார்த்தியின் குரலில் ட்ரெய்லர் தொடங்குகிறது.

விஞ்ஞானியான செல்வராகவன் டைம் டிராவல் போன் ஒன்றை கண்டுபிடிப்பதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. 80களில் மிகப்பெரிய கேங்ஸ்டர்களாக விஷால், SJ சூர்யா வருகின்றனர். தற்காலத்திலிருந்து கடந்தகாலத்துக்கு போன் செய்து பேசுவதால் வரும் சிக்கல்களே கதைக்களமாக இருக்கலாம் என்பதை ட்ரெய்லரின் முலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ட்ரெய்லரில் ஒரு காட்சியில் சில்க் ஸ்மிதாவின் கேமியோ வருகிறது. சிஜி மூலம் அவரை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர்.படம் வரும் செப்., 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

From Around the web