டைம்லூப்பில் சிக்கிக்கொண்ட சிம்பு- மாநாடு பட டிரெய்லர்..!

 
மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள மாநாடு படத்தின் டிரெய்லர் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கான டிரெய்லர் மூலம் இது வித்தியாசமான கதையமைப்பில் உருவாகியுள்ளது தெரிகிறது.

கதைப்படி முக்கிய அரசியல் கட்சி கொல்லப்படுகிறார். அவரை நடிகர் சிம்பு கொலை செய்துவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இது நடந்துகொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் சிம்பு, போலீசார், கதாநாயகி உள்ளிட்டோருக்கு ஏற்கனவே நடந்த சம்பவம் தொடர்ந்து நடப்பது தெரிய வருகிறது.

அதை தொடர்ந்து அந்த அரசியல் தலைவரை சிம்பு கொலை செய்யாமல் தடுக்க அவருடைய சுற்றத்தார் உதவி செய்கின்றனர். போலீசார் கொலையாளியை பிடிக்க முயற்சி செய்கின்றனர். இருவருடைய முயற்சியில் யார் வெற்றி அடைந்தார்கள் என்பதே மீதி கதை. 

மிகவும் திரில்லிங்கான இந்த டிரெய்லர் மொத்த கதையையும் சிறப்பான எட்டிட்ங் மூலம் தெரியப்படுத்துகிறது.ஏற்கனவே இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநாடு படத்தின் டிரெய்லர் வெளியானதன் மூலம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

From Around the web