’துரோகமும் துரோகியும் புதுசா என்ன..? தெறிக்கவிடும் ‘பத்து தல’ டிரெய்லர்..!!
கன்னட சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, சாயா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் ‘மஃப்டி’. நார்தன் என்பவர் இயக்கிய இந்த படம் தான், ‘கே.ஜி.எஃப்’ போன்ற கதை உருவாக வித்திட்டது.
இந்த படத்தை தாம் தமிழில் ’நெடுஞ்சாலை’ கிருஷ்ணா ‘பத்து தல’ என்று ரீமேக் செய்துள்ளார். கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனினும் அவருடைய கதாபாத்திரம் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியாகியுள்ளது. மிரட்டலான காட்சிகள், கிறங்கடிக்கும் ஆக்ஷன், பரபரக்கும் பஞ்ச் என கமர்ஷியல் படங்களுக்கு எந்தவிதமான சமரசம் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில் ஒவ்வொரு காட்சிகளும் பரபரக்கின்றனர்.
குறிப்பாக நடிகர் சிம்பு பேசும் ஒவ்வொரு வசனமும் கொதிப்புடன் உள்ளது. சிம்பு நடிப்பில் முன்னதாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உளளிட்ட படங்களில் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. அந்த வரிசையில் இந்த படமும் ஹிட்டாகும் என்று சொல்லப்படுகிறது. வரும் 30-ம் தேதி ’பத்து தல’ படம் உலகளவில் வெளிவரவுள்ளது.