சிம்பு - கவுதம் மேனனின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ அப்டேட்..! 

 
நதிகளிலே நீராடும் சூரியன்

சிம்பு - கவுதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் ‘நதிகளிலே நீராடு சூரியன்’ படத்திற்கான புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர். ரஹ்மான் - தாமரை கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. முன்னதாக இந்த நால்வர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

குறிப்பாக இவ்விரு படத்திலும் பாடல்களும் எவர்கிரீன் தமிழ் சினிமா பாடல்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டன. இன்றும் இந்த படங்களின் பாடல்களை பலரும் முனுமுனுத்து வருகின்றனர். தேசியளவிலுள்ள இசைத்துறை ஜாம்பவான்கள் பலரும் இப்படங்களின் பாடல்களை பாராட்டியுள்ளனர்.

தற்போது இதே நால்வர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முந்தைய இரண்டு படங்களை போல இப்படமும் காதலை மையப்படுத்தி உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் முதல் துவங்கும் என்கிற அப்டேட் வெளியாகியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்துவிட்டு, இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

From Around the web