ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறும் சிம்பு- காரணம் இதுதான்..!!
ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்த சிம்பு, அவர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Apr 19, 2023, 06:05 IST
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு ஒபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் பத்து தல. கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியான இப்படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்தி, ப்ரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், கலையரசன் மற்றும் டீஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைப்பு பணிகளை செய்திருந்தார். குறிப்பிட்ட சில பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தன. இந்த படம் வெளியான ஒரு வாரத்தில் சுமார் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது.
இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார். பத்து தல படத்தின் வெற்றியை முன்னிட்டு, அவர்கள் அனைவருக்கும் விருந்தளித்தார். அந்த வகையில் சிம்பு தனது கையால் பிரியாணி பரிமாறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.