வர்த்தக விளம்பரத்தில் ஸ்டைலாக தோன்றிய சிம்பு..!
 

 
சிம்பு

முதன்முறையாக நடிகர் சிம்பு நடித்துள்ள விளம்பர தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, தந்தை டி.ஆர் இயக்கிய சில படங்களில் அவ்வப்போது ஒரு பாடலுக்கு ஆடி பிரபலமானார். சில வருடங்கள் டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து மன்மதன் படம் மூலம் உச்ச நட்சத்திரமாக மாறினார். அதற்கு பிறகு வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும், சிம்புவின் மார்கெட் ஏற்றத்தில் தான் இருந்தன. சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். அப்போது கவுதம் மேனன் உடன் சிம்பு இணைந்து பணியாற்றிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றன. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்.

தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சிம்பு இணைய வழி ஆடை வர்த்தக நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் விளம்பரமாகும்.

இந்த விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த விளம்பர வீடியோவை தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் சிம்பு பதிவிட்டுள்ளார்.

From Around the web