’பத்து தல’ படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் தெரிந்தது..!!

சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றது. அதனால் ‘பத்து தல’ படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதற்கேற்ப படத்தின் வெளியீடு பெரியளவில் இருந்தது.
இந்த படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ப்ரியா பவானிசங்கர், கவுதம் மேனன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி பத்து தல படம் முதல் நாளில் மட்டும் ரூ. 12.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதுவரையிலான சிம்பு படங்களில், முதல் நாளில் இவ்வளவு வசூல் ஈட்டிய படம் பத்து தல என்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து சிம்பு பல்வேறு படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான படப்பிடிப்பு அடுத்து துவங்கவுள்ளது. இதுவும் சிம்பு கேரியரில் முக்கியமான படமாக அமையும் என்று கூறப்படுகிறது.