நடிகர் ஜெய்யை திக்குமுக்காடச் செய்த சிம்பு..! காரணம் இதுதான்..!!
 

 
நடிகர் ஜெய்யை திக்குமுக்காடச் செய்த சிம்பு..! காரணம் இதுதான்..!!

தன்னுடைய பிறந்தநாளில் சர்பரைஸாக அழையா விருந்தாளியாக கலந்துகொண்ட சிம்புவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து சினிமாவில் கால்பதித்தார் ஜெய். அதை தொடர்ந்து சென்னை -28 படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தன்னுடைய 38-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார்.

அப்போது நடிகர் சிம்பு சற்றும் எதிர்பாராத வகையில் ஜெய் வீட்டுக்கு வந்து இன்பதிர்ச்சி தந்துள்ளார். மேலும் கேக் வெட்டி அவருக்கு ஊட்டியும் விட்டுள்ளார் சிம்பு. அந்த ஆச்சரிய அன்பினால் திக்குமுக்காடிப் போன ஜெய், சிம்புவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. மிகுந்த இன்பதிர்ச்சியாக இருந்தது. இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்த சிம்புவுக்கு மிக்க நன்றி. இதனால் என்னுடைய பிறந்தநாள் மேலும் சிறப்பாக அமைந்துள்ளது என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிம்பு நடிப்பதாக இருந்த ‘வேட்டை மன்னன்’ படத்தில் ஜெய்க்கு முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களாக் அந்த படம் கைவிடப்பட்டது. ஆனால் ஜெய் தொடர்ந்து தன்னை சிம்பு ரசிகராக பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். 

From Around the web