நடிகை சிம்ரனின் இரண்டாவது மகனை பார்த்துள்ளீர்களா..?? இதோ..!!
தமிழில் 1997-ம் ஆண்டு வெளியான ‘வி.ஐ.பி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சிம்ரன். அந்த ஆண்டிலேயே வி.ஐ.பி உட்பட ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் மற்றும் பூச்சுடவா என நான்கு படங்கள் அவருடைய நடிப்பில் வெளியாகின. இதில் பூச்சுடவா தவிர அனைத்துமே ஹிட்டாகின.
இதன்மூலம் கடந்த 1997-ம் ஆண்டு முதல் தமிழில் முன்னணி நடிகையான சிம்ரன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார். இவருடைய வருகைக்கு பிறகு தான் கமர்ஷியல் படங்களிலும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ் சினிமாவில் 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் வரை நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த சிம்ரன், திடீரென எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் உறவினர் தீபக் பாஹாவை திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து 2005-ம் ஆண்டுக்கு பிறகு அவருடைய நடிப்பில் வெளியான ஏனைய படங்கள் படு தோல்வி அடைந்தன.
இதனால் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்த துவங்கிய சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அதில் மூத்த மகனை பலரும் பார்த்துள்ளனர், ஊடகங்களும் சந்தித்துள்ளனர். ஆனால் அவரது இளைய மகனை யாரும் பார்த்திருக்கவில்லை. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இளைய மகன் ’வீர்’யை சிம்ரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு மிகவும் கவனிக்கத்தக்க படங்களில் சிம்ரன் நடித்து வருகிறார். அதில் வாரணம் ஆயிரம், பேட்ட போன்ற படங்கள் மிகவும் முக்கியமானவை. தற்போது அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.
 - cini express.jpg)