குழந்தைகளுடன் நடுரோட்டில் நின்ற சிம்ரன்..! ஓடி வந்து உதவிய தயாரிப்பாளர்..!

திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் நடிகை சிம்ரனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா நடிகையான சிம்ரன் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சென்றிருந்த போது அங்கே விடுதி ஒன்றில் தங்குவதற்கான இடம் இல்லாமல் வெளியே நின்றிருந்தார்.அதன் போது தயாரிப்பாளர் தாணுவிடம் சிம்ரன் உதவி கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
நட்சத்திரப் பட்டம் கிடைத்தாலும் தனது முதல் படத்தின் தயாரிப்பாளரான ஒருவராக என்னை மறக்காமல் சிம்ரன் என்னை நேரடியாக போன் செய்து பேசினார் என அவர் கூறி அதனால் எனக்கு மிகுந்த நெகிழ்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் சிம்ரன் பேசுகையில் "அந்த நேரத்தில் நான் என் குழந்தைகளுடன் இருந்த போது அவர் உதவி செய்யவில்லை என்றால் நான் எங்கு தங்கியிருப்பேன்? அது எனக்கு மிகவும் கஷ்டமான நேரம் என்று கூறி " உருக்கமாக தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
மேலும் எஸ் தாணு அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் உடனேயே அந்த நடிகைக்கு உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தின் பின்னர் சிம்ரனுக்கு தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் .இதற்கு நன்றிக்கடனாக சிம்ரன் தனது மால் திறப்பு விழாவிற்கு தாணுவை அழைத்தமையும் குறிப்பிடத்தக்கது .