கார்த்தியை மிரட்டும் வில்லியாக மாறும் சிம்ரன்..!
 

 

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் வில்லியாக நடிப்பதற்கு பிரபல நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2000-ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், திருமணமானவுடன் சினிமாவை விட்டு விலகினார். ஆனால் சினிமாவை விட்டு போன வேகத்திலேயே மீண்டும் சினிமாவுக்கு வந்தார். சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், முக்கிய நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்கள் என பரபரப்பாக வந்து போனார். ஆனால் மறுபிரவேசத்தில் அவருக்கு வலிமையான பிரேக் கிடைக்கவில்லை.

அதை தொடர்ந்து பேட்ட படத்தில் முதன்முறையாக ரஜினிகாந்துக்கு அவர் ஜோடியாக நடித்தார். இதன்மூலம் தற்போது சிம்ரன் மெல்ல மெல்ல முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் சர்தார். இந்த படத்தில் ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கின்றனர்.

ஆனால் படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழுவினர் சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுவும் இது வில்லி கதாபாத்திரம் என்பது கூடுதல் தகவல். ஏற்கனவே பார்த்தாலே பரவசம், சீம ராஜா போன்ற படங்களில் மிரட்டல் வில்லியாக நடித்து சிம்ரன் அசத்தி இருப்பார். அதனால் நிச்சயம் இப்படத்தில் நடிக்க சிம்ரன் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web