பாடகி கல்பனாவின் முதல் பதிவு..பல வருஷம் தூக்கமில்லை..கணவர் தான் காரணம்..!

 
1

பிரபல பாடகி கல்பனா, பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி பல ஹிட் பாடல்களை பாடியவர். தற்போது அவர் கடுமையான மனநிலையில் தற்கொலை முயற்சி செய்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது.  

மேலும் இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டா பகுதியில் உள்ள தனது வீட்டில் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர்.

தற்போது உடல் நலம் சீராகி மறுபிறவி எடுத்துள்ள பாடகி தனக்கு நடந்த விபரீதம் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் முதல் பதிவில் " இன்று நான் உயிரோட வந்து உங்க முன்னாடி பேசுறேன்னா அதுக்கு என் கணவர் மற்றும் மகள் தான் காரணம்; எனக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை ;நான் தற்போது வரை பல படிப்புகள் மேற்கொண்டு வருவதாலும் பாடல் வேலைகளிலும் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன் அதனால் பல வருஷங்களாக தூக்கமில்லாமல் தவித்தேன்.இதனால் வைத்திய ஆலோசனைகளின் படி மாத்திரை எடுத்தேன் அது கொஞ்சம் அதிகமானதால் இவ்வாறு நிகழ்ந்தது இதை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை " என கூறியுள்ளார்.

From Around the web