சிறுவர்களை தாக்கிய பாடகர் மனோவின் மகன்.. பாய்ந்தது வழக்கு!

 
1

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரபி நேற்று இரவு குடிபோதையில் சிறார்களை தாக்கியதாக கூறப்படுகிறது. வளசரவாக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்ற கிருபாகரன் என்ற சிறுவனையும், 16 வயது சிறுவனையும், மது போதையில் மனோவின் மகன் உட்பட மனோவின் நண்பர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டுக்கு சென்று அவரது மகனிடம் நேரில் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், மனோவின் மகன் குடிபோதையில் குழந்தைகளை தாக்கியுள்ளார். இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் பாடகர் மனோவின் மகன்கள் சாஹிர், ரபிக் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இரு மகன்களும் தலைமறைவாகிவிட்டதால், அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

From Around the web