அமெரிக்காவில் சூப்பர் சிங்கர் பிரகதியின் தாயார் செய்வது இந்த வேலையா..??

பிரபல சூப்பர் சிங்கர் பாடகியாக பிரகதி குருநாத் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் அவருடைய தாயார் அமெரிக்காவில் செய்து வரும் பணி குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
pragathi

விஜய் தொலைக்காட்சி பல்வேறு கட்ட சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருவது சூப்பர் சிங்கர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர். இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் பிரகதி.

இவர் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அமெரிக்காவில் வசித்து வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். அமெரிக்காவில் தயாராகும் இந்திய தொடர்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, சமீபத்தில் தனது தாய் கனகாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவருடைய தாய் சான் ஜோசே காவல்துறையில் சமூக சேவை காவலராக உள்ளார்.

இது அரசுப் பணி கிடையாது. ஆனால் அதே அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். இதன்மூலம் கிடைக்கும் அனுபவத்தை வைத்து, அதற்குரிய தேர்வு எழுதி காவல்துறையில் சேரலாம். கனகாவை போன்று கலிஃபோர்னியா மாகாணத்தில்  சமூக சேவை காவலராக அரங்கேற்றம் பிரமிளா பணியில் இருந்தார். இப்போது அவர் காவலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web