சாலை டிவைடரில் மோதி கார் விபத்தில் சிக்கிய பாடகி ரக்‌ஷிதா..!!
 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகி ரக்‌ஷிதா பெரும் கார் விபத்தில் சிக்கி, உயிர் பிழைத்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 
rakshita

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்து பிரபலமானவர் ரக்‌ஷிதா. சென்னையைச் சேர்ந்த அவருக்கு தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.

இதன்மூலம் சினிமாவிலும் அவர் பாடல்களை பாட துவங்கினார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ தொடரில் ‘தேவராளன் ஆட்டம்..’ மற்றும் ‘சொல்...’ போன்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் அந்த படத்தில் மற்ற மொழிப் பதிப்புகளுக்கும் அவர் பாடல் பாடியுள்ளார்.

இடக்குறிப்பிட்ட பாடல்கள் அவருக்கு தமிழ் திரையுலகில் அடையாளத்தை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், நான் பெரும் கார் விபத்தை சந்திக்க வேண்டி இருந்தது. அதுவும் சாலையில் இருந்த டிவைடரின் மீது மோதிவிட்டது. மலேசியாவுக்கு நான் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துவிட்டது. எனால் 10 நொடிகள் சாலையில் பரபரப்பு நிலவிவிட்டது. நல்லவேளையாக காரில் இருந்த ஏர்பேக் துரிதமாக செயல்பட்டு, நான் காப்பாற்றப்பட்டேன். எனினும் ஓட்டுநருக்கும் முன்னாடி அமர்ந்திருந்த மற்றொரு பயணிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்நேரத்தில் கடவுளுக்கு நான் கூறுகிறேன் என்று ரக்‌ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

From Around the web