பாடகி ஸ்ரேயா கோஷாலுக்கு குழந்தை பிறந்தது- என்ன குழந்தை தெரியுமா..?

 
ஸ்ரேயா கோஷால்

பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷால் மற்றும் ஷிலாத்தியா முகோபதாயாயா தம்பதியினருக்கு கடந்த 22-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘தேவ்தாஸ்’ என்கிற படம் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷால். முதல் படத்திற்காக இவர் பாடிய முதல் பாடலுக்கு அந்தாண்டில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி வருகிறார். தமிழில் முதன்முறையாக கார்த்திக் ராஜா இசையில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஆல்பம்’ படத்தில் பாடினார். அந்த பாடல் இன்று வரை ரசிகர்களால் ரசிகப்படுகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் என பல்வேறு பிராந்திய மொழிகளில் கொண்டாடப்படும் பாடகியாக இருக்கும் ஸ்ரேயா கோஷால், கடந்த 2015-ம் ஆண்டு ஷிலாத்தியா முகோபதாயாயா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி மதியம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரேயா கோஷால், இதுபோன்ற உணர்வை நான் எப்போதும் அடைந்ததில்லை. என்னுடைய கணவரும் எனது குடும்பத்தினரும் எல்லையில்லா ஆனந்தத்தில் இருக்கிறோம். ரசிகர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி என்று ஸ்ரேயா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

From Around the web