எஞ்சாயி பாடலை பாடிய பாடகி மரணம்..!

 
எஞ்சாயி எஞ்சாமி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பாடலாசிரியர் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் மகள் தீ கூட்டணியில் வெளியான ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்து. தேசியளவில் பலரும் இந்த பாடலை பாடி கொண்டாடினர்.

மேலும் ரீல்ஸ் உள்ளிட்ட ஷாட் வீடியோ செயலிகளில் இந்த பாடலுக்கு நடனமாடி பிரபலங்கள் பலர் ஷேர் செய்தனர். இதனால் தேசியளவில் எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இது சர்வதேச இசைத்துறையிலும் எதிரொலித்தது.

இந்த பாடலில் 'என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை' என்ற வரிகளை பாடகி பாக்கியம்மா பாடி இருந்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்த விபரம் தெரியவந்துள்ளது.

பாடகி பாக்கியம்மா பாட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அறிவு, இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் மூழ்கடித்துவிட்டது என்று இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

From Around the web