ஒரே ஷாட்; ஒரே கதாபாத்திரம்- ஹன்சிகா நடிக்கும் மாறுபட்ட படம்..!

 
ஒரே ஷாட்; ஒரே கதாபாத்திரம்- ஹன்சிகா நடிக்கும் மாறுபட்ட படம்..!

தற்போது ‘மஹா’ படத்தில் நடித்து முடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, அடுத்ததாக தெலுங்கில் மாறுபட்ட முயற்சியோடு தயாரிக்கப்படும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவிடம் கையில் இருப்பதோ ஒரேயொரு படம். அது தான் மஹா. இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. அதை தொடர்ந்து தெலுங்கில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மாறுபட்ட முயற்சியில் தயாராகவுள்ளது.

அதன்படி ஒரேயொரு ஷாட்டில், ஒரே கதாபாத்திரம் கொண்ட த்ரில்லர் கதையமைப்பில் இந்த படம் தயாராகவுள்ளது. இதற்கு 105 மினிட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

தமிழிலும் இதேபோன்ற ஒரு முயற்சியை பார்த்திபன் எடுத்துள்ளார். இரவில் நிழல் என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை பார்த்திபன் இயக்கி அவர் மட்டுமே நடிக்கவுள்ளார். ஒரே ஷாட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

From Around the web