வெள்ளித்திரையில் நடிக்க இருக்கும்  ’சிறகடிக்க ஆசை’ நடிகை.. டைட்டில் என்ன தெரியுமா?

 
1

விஜய் டிவியில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நாயகி ஆக நடித்து வரும் மீனா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ ரீமேக் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் இந்த இரண்டு சீரியல்களில் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் திரை உலக வாய்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் மீனாவின் தங்கை சீதா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை சங்கீதா லியோனிஸ் மீனாவுக்கு முன்பே திரையுலகில் நுழைந்து விட்டார். அவர் நடிக்கும் முதல் படத்தின் பூஜை என்று சென்னையில் நடந்த நிலையில் அந்த பூஜை குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். 

சங்கீதா லியோனிஸ் நாயகியாக நடிக்கும் திரைப்படத்திற்கு ’குற்றம் புதிது’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜித் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

பல் டாக்டருக்கு படித்த சங்கீதா லியோனிஸ் கலை மீது உள்ள ஆர்வம் காரணமாக ’சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு திரையுலகில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதே போல் இன்னும் பல படங்களில் நடித்து அவர் புகழ் பெற வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

From Around the web