சீரியலில் இருந்து விலகுகிறாரா ’சிறகடிக்க ஆசை’ நடிகை..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியலுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சீரியலின் முக்கிய பெண் கேரக்டர்களாக மீனா, ரோகிணி மற்றும் ஸ்ருதி ஆகிய கேரக்டர்களில் கோமதி பிரியா, சல்மா அருண், ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் நடித்து கொண்டிருக்கும் நிலையில் இதில் ஸ்ருதி கேரக்டரில் நடித்து வரும் ப்ரீத்தா ரெட்டி என்பவருக்கு தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’இனியா’ என்ற சீரியலில் நடித்து வரும் நிலையில் அந்த சீரியலிலும் அவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் காட்சிகள் அமைத்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ’சிறகடிக்க ஆசை’ சீரியலிலும் தற்போது அவர் முத்துவுடன் மோதும் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அவருடைய நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டு சீரியலின் படப்பிடிப்புக்கு மாறி மாறி சென்று வருவதால் சில சமயம் சிக்கல் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் ஒரு சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாகவும் அனேகமாக சன் டிவி ’இனியா’ சீரியலில் இருந்து தான் அவர் விலகுவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web