‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகர் சுந்தர் சி படத்தில் நடித்துள்ளாரா ? வெளியான புகைப்படம்..!
May 20, 2024, 06:05 IST

'சிறகடிக்க ஆசை' சீரியலில் வில்லனாக, சிட்டி கேரக்டரில் நடித்து வரும் கார்த்திக் பிரபு என்பவர் தனது சமூக வலைதளத்தில் தான் சுந்தர் சி உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ’தலைநகரம் 2’ என்ற திரைப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் சிட்டி, சுந்தர் சி நண்பராக நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் கூட அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்நிலையில் இந்த படத்தில் சுந்தர் சி உடன் தான் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் கார்த்திக் பிரபு பதிவு செய்துள்ளதை அடுத்து, ’சிறகடிக்க ஆசை’ செல்வம் கேரக்டரில் நடித்து வரும் பழனியப்பன் உள்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.