மீண்டும் துவங்கிய ‘எஸ்.கே. 21’ படப்பிடிப்பு- இயக்குநர் சூசகம்..!!

ப்ரினிஸ் படுதோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
எஸ்.கே 21 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் 55 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது.
Insta story of @Rajkumar_KP 🤩🔥#SK21 - ARRI 💥 pic.twitter.com/PpL4YWVyz5
— KARTHIK DP (@dp_karthik) June 6, 2023
அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. அந்த தகவலை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமூகவலைதளங்களில் சூசமாக தெரிவித்துள்ளார்.