சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் #SK21 படப்பிடிப்பு துவக்கம்..!!
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் பட தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகும் ஒரு படத்தையும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மற்றொரு படத்தையும் அவர் ஒன்றாக தயாரிக்கிறார்.
இன்று முதல் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை கமலுடன் சேர்ந்து சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
அதன்படி இன்று சென்னையிலுள்ள கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது. படக்குழுவுடன் தயாரிப்பாளர் கமல்ஹாசனும் விழாவில் கலந்துகொண்டார். அவர் ஆக்ஷன் கூறி படத்தின் ஷூட்டிங்கை துவங்கிவைத்தார்.
#SK21 The Journey begins #Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SK21 #RKFIProductionNo_51@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh @SonyPicsIndia… pic.twitter.com/myiW77GRcR
— Raaj Kamal Films International (@RKFI) May 5, 2023
இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதை சிறப்பாக இருப்பதாகவும், படத்தை தயாரிப்பதில் பெருமை அடைவதாகவும் கமல்ஹாசன் நிகழ்வில் பேசினார். அதை தொடர்ந்து பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஒரு கமல்ஹாசனின் ரசிகனாக அவர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவது எனக்கு பெருமையாக உள்ளது. சிவகார்த்திகேயன் எனது நெருங்கிய நண்பர், அவருடைய நடிப்பில் உருவாகும் இந்த படம் எனக்கு எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும் என்று கூறினார்.
எஸ்.கே. 21 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நடப்பாண்டில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.