டாக்டர் முடிஞ்சு டான்-ஆன சிவகார்த்திகேயன்: வெளியான அப்டேட்..!

 
சூரியுடன் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி

டாக்டர் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் அப்டேட் குறித்து படக்குழு தகவல்கள் வெளியிட்டுள்ளன.

முன்னணி இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சிபி சக்ரவர்த்தி. அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் டாக்டர் படத்தில் கதாநாயகி நடித்த ப்ரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும்  எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னை என பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. சில தினங்களுக்கு முன் டான் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சூரி, தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார், என இயக்குனர் சிபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.  

From Around the web