ஒன்றாக வெளியாகும் மாவீரன் மற்றும் அயலான்..?

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் ஹிட்டாகவில்லை. இதனால் அவர் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் மற்றும் அயலான் படங்களை அவர் பெரிதும் நம்பியுள்ளார்.
அதிலும் மாவீரன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்து முடிவடைந்து படம் ஜூலை 14-ம் தேதி வெளியிட தயாராகவுள்ளது. இது சிவகார்த்திகேயனின் 21-வது படமாகும். மேலும் இந்த படத்தை மடோனா அஷ்வின் இயக்கியுள்ளதால், படத்துக்கு பெரிதும் எதிர்பார்ப்பு உள்ளது.
மாவீரன் படம் ஜூலை 14-ம் தேதி வெளிவருவதை அடுத்து, அதேநாளில் திரையரங்குகளில் அயலான் பட டீசரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அறிவியல் புனைவு கதையான அயலான் படம், சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வந்தது. வரும் தீபாவளி நாளில் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.