விரைவில் துவங்கும் ‘டான்’ பட ஷூட்டிங்- சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி..!

 
டான் படக்குழு

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியங்கா அருள் மோகன் இணைந்து நடித்து வரும் ‘டான்’ படத்தின் ஷூட்டிங் துவங்கப்படுவதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.

’டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களுக்குமான இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தை வெளியிட முடியாதபடி உள்ளது.

இதற்கிடையில் மாநில அரசு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளை அளித்து வருவதன் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டான் படம் ஷூட்டிங் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் ஜூலை 15-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் டான் பட ஷூட்டிங் மீண்டும் துவங்குகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இவர் அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஆவார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ‘டான்’ படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சூரி, சமுத்திரகனி, ஷிவாங்கி, புகழ், ஆர்.ஜே. விஜய், முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன் என பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

From Around the web