விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்..!

 
விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்..!

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானதை அடுத்து, வேறொரு விதத்தில் அவர் அந்த படத்திற்கு பங்களிப்பை வழங்கவுள்ளார்.

கோலமாவு கோகிலா, மான்ஸ்டர், டாக்டர் படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். இன்னும் பெயரிடப்படாமல் ‘தளபதி 65’ என்று குறிப்பிடப்படும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது ஜியார்ஜியா நாட்டில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அபர்ணா தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த கூட்டணியில் முடிக்கப்பட்டுள்ள டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதினார். அந்த பாடல் மிகவும் வரவேற்பு பெற்றது.

தற்போது, அதேபோல இந்த பாடலும் வரவேற்பை பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த பாடல் தொடர்பான விபரங்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web