மீண்டும் துவங்கியுள்ள எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் இல்லையா..??
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வரும் படம் எஸ்.கே. 21. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை படக்குழுவினர் எஸ்.கே. 21 என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. விரைவில் நமது நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான பாதுகாப்பு பணிகளை காரணம் காட்டி எஸ்.கே 21 படத்துக்கு காஷ்மீரில் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் சென்னை திரும்பிய படக்குழு, கடந்த ஒரு மாத காலமாக எதுவும் செய்யாமல் இருந்தது. தற்போது எஸ்.கே 21 படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கியுள்ளது. மாவீரன் பட வேலைகளில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருப்பதால், அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதற்கு பதிலாக அவர் இல்லாத காட்சிகள், மாண்டேஜ் ஷார்டுகள் போன்றவை படமாக்கப்பட்டு வருகின்றன. அதேசமயத்தில் சிவகார்த்திகேயன் இப்படத்தின் ஷூட்டிங்கில் எப்போது பங்கேற்பார் என்பதும் தெரியவில்லை. மொத்தம் 55 நாட்கள் எஸ்.கே 21 ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெறுகிறது.
 - cini express.jpg)