பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்..!

 
சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாழ்’ படத்தை ஓடிடியில் வெளியிடுவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், சில படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அவர் தயாரிப்பில் முன்னதாக வெளியான ‘கனா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார்.

அதை தொடர்ந்து தொலைக்காட்சி பிரபல ரியோ நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தை தயாரித்தார். அதுவும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த வரிசையில் அவர் மூன்றாவதாக தயாரித்துள்ள படம் ‘வாழ்’. அருவி பட இயக்குநர் அருண்பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் கொரோனா பிரச்னையால் படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த படக்குழு தற்போது தீவிரமான முடிவை எடுத்துள்ளது.

அதன்படி ஜூலை 16-ம் தேதி இப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web