சிவகார்த்திகேயன் முருகதாஸ் பட கூட்டணியின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ..!

 
1

சினிமா பயணத்தில் பல நடிகர்கள் விலகி வரும் நிலையில், அந்த இடங்களை நிரப்பும் நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையேடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23வது படத்தை நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

Sivakarthikeyan 23

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான லுக்கில் தோன்றுகிறார்.

From Around the web