மீண்டும் சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி..!

 
டாக்டர் படக்குழு

டாக்டர் படம் வெளியாகி நன்றாக வசூல் செய்து வரும் சூழலில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நீண்ட மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்ட படம் டாக்டர். சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்து படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தை வெளியிட முடியாமல் இருந்தது.

தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், டாக்டர் படம் திரைக்கு வந்துள்ளது. வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, இப்படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

டாக்டர் படம் வெளியான ஒரேநாளில் ரூ. 7 கோடி மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மகிழ்ச்சி அடைந்த நெல்சன் திலீப்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இவர்கள் இணையும் படத்தை லைக்கா தயாரிக்கவுள்ளதாகவும், பீஸ்ட் பட பணிகளை நெல்சன் முடித்தவுடன் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web