கேப்டன் விஜயகாந்தின் உருவ படத்திற்கு சிவகார்த்திகேயன் மரியாதை..!

 
1

நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து விட்டு, விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று விஜயகாந்த் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து விட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

From Around the web