ரஜினியின் பஞ்ச் வசனத்தை அடுத்த படத்திற்கு தலைப்பாக வைத்த சிவகார்த்திகேயன்..!

 
ரஜினியின் பஞ்ச் வசனத்தை அடுத்த படத்திற்கு தலைப்பாக வைத்த சிவகார்த்திகேயன்..!

டான் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவிலேயே இந்த படம் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கும் ‘டான்’ படத்தில் நடத்தி வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அசோக் குமார் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி இந்த படத்திற்கு ‘சிங்க பாதை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது சிவாஜி படத்தின் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வசனமாகும்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ரஜினிகாந்தின் ரசிகர்களாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். அதன்படி அவருடைய பஞ்ச் வசனத்தை தலைப்பாக வைத்துள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

From Around the web