படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பு- மாவீரன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பகீர்..!!
வரும் 14-ம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியாகவுள்ளதை முன்னிட்டு, சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பங்கேற்ற படக்குழுவினர், பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், பொதுவாக புதிய படம் ரிலீஸாகும் போது, வெளியீடு குறித்த அச்சமும் பதற்றமும் இருக்கும். ஆனால் மாவீரன் படத்தை உங்களுக்கு எல்லாம் எப்போது காட்ட போகிறோம் என்கிற ஆர்வம் தான் அதிகரித்துள்ளது. ரொம்பவும் சமூக அக்கறை மற்றும் பார்வையை கொண்டவர் மடோன் அஸ்வின். அதனால் அனைவரும் விரும்பும் வகையில் அவர் மாவீரன் படத்தை உருவாக்கியுள்ளார்.

மாவீரன் படத்தில் அவருடைய சமூக அக்கறை பிரதிபலித்தாலும், அவரது சமூக பார்வையை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. அதனால் படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களுக்கு, நிச்சயமாக படம் சொல்லும் சமூகப் பார்வையை உணர முடியும். அதனால் அவரை ரொம்பவும் ஸ்ட்ரிக்டான ஆள் என்று நினைத்துவிட வேண்டாம். அவர் மிகவும் ஸ்வீட்டான நபர்.
நான் நடித்த போன படம் தோல்வி அடைந்துவிட்டது. எனது படங்களின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். ஆனால் வெற்றி என்பது மொத்த குழுவினரின் உழைப்பால் கிடைப்பது. அதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
 - cini express.jpg)