இனிமேல் அது வதந்தி கிடையாது; உண்மை தான்- கடுப்பில் சிவகார்த்திகேயன்..!!

மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
sivakarthikeyan

மண்டேலா படம் மூலம் தேசியளவில் கவனமீர்த்தவர் மடோன் அஸ்வின். இவர் அடுத்து இயக்கி வரும் படம் தான் மாவீரன். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, சரிதா, புஷ்பா வில்லன் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் முடிவுக்கு வந்ததை அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. 

முன்னதாக மாவீரன் படத்தை பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் அன்று உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் வெளியாகிறது. இதனால்  மாவீரன் ரிலீஸ் தள்ளிப்போனது. 


அதன்காரணமாக விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்வைத்து ஆகஸ்டு 11-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதற்கான அறிவிப்பு வெளியிட்ட சில தினங்களில்  ‘ஜெயிலர்’ படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனால் மீண்டும் மாவீரன் படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக ஜூலை மாதம் அப்படம் வெளியாகலாம் என கூறப்பட்டது. அதன்படி தற்போது மாவீரன் திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயிண்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவீரன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் மடோன் அஸ்வின் என்பதால், இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதை அறிந்துகொண்ட ஜெயிலர் மற்றும் மாமன்னன் பட தயாரிப்பாளர்கள், மாவீரன் பட தயாரிப்பாளரை அணுகி படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க கோரியுள்ளனர். 

இதனால் தான் அப்பட தயாரிப்பாளரும் ரிலீஸ் தேதியை இரண்டு முறை மாற்றியுள்ளார். இதை முன்பே தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன், ரிலீஸ் குறித்து எந்த தகவல்களும் தனது காதுக்கு வரக்கூடாது, படம் வெளியாகும் போது வரட்டும் என்று எண்ணி சமூகவலைதள பயன்பாட்டில் இருந்து ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
 

From Around the web